டேவிட் வார்னரின் பவுண்டரி சாதனையை சமன்செய்த சாய் சுதர்ஷன்!

Updated: Sat, May 31 2025 14:26 IST
Image Source: Google

18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று முல்லன்பூரில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை வீழ்த்து இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

அதேசமயம் இப்போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும் அந்த அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்ஷன் அரைசதம் கடந்ததுடன் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 80 ரன்களை சேர்த்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியின் மூலம் சாய் சுதர்ஷன் ஐபிஎல் தொடரில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். 

ஒரு சீசனில் அதிக பவுண்டரிகள்

இந்நிலையில் இப்போட்டியில் சாய் சுதர்ஷன் 10 பவுண்டரிகளை அடித்ததன் மூலம், இந்த ஐபிஎல் சீசன் அவர் மொத்தமாக 88 பவுண்டரிகளை விளாசிவுள்ளார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக பவுண்டரிகளை விளாசிய வீரர் எனும் டேவிட் வார்னரின் சாதனையை சாய் சுதர்ஷன் சமன்செய்து அசத்தியுள்ளார். முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு டேவிட் வார்னர் 88 பவுண்டரிகளை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில் சாய் சுதர்ஷன் அதனை சமன்செய்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள்

  • 88* – சாய் சுதர்சன் (2025)
  • 88 – டேவிட் வார்னர் (2016)
  • 86 – சச்சின் டெண்டுல்கர் (2010)
  • 85 – ஷுப்மான் கில் (2023)
  • 83 – விராட் கோலி (2016)
  • 83 – ஜோஸ் பட்லர் (2022)
  • 82 – யஷஸ்வி ஜெய்ஸ்வால் (2023)

ஒரு ஐபிஎல் சீசனில் 750 ரன்கள்

இப்போட்டியில் சாய் சுதர்ஷன் 80 ரன்களை அடித்ததன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் தனது 750 ரன்களையும் பூர்த்தி செய்தார். அதன்படி சுதர்சன் இந்த சீசனில் 15 இன்னிங்ஸ்களில் 54.21 சராசரியுடன் 760 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம், ஒரு ஐபிஎல் சீசனில் 750 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு முன்பு, விராட் கோலி, ஷுப்மான் கில், ஜோஸ் பட்லர் மற்றும் டேவிட் வார்னர் மட்டுமே இந்த சாதனையை  செய்துள்ளனர்.

ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள்

  • 973 - விராட் கோலி (2016)
  • 890 - ஷுப்மான் கில் (2023)
  • 863 - ஜோஸ் பட்லர் (2022)
  • 848 - டேவிட் வார்னர் (2016)
  • 760* - சாய் சுதர்சன் (2025)

Also Read: LIVE Cricket Score

இப்போட்டி குறித்து பேசினால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. இதில் ரோஹித் சர்மா 81 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 47 ரன்களையும் எடுத்தனர். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதில் சாய் சுதர்ஷன் 80 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை