அவரது காணொளி எனக்கு நிச்சயம் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது - சாய் சுதர்ஷன்! 

Updated: Sat, Dec 02 2023 22:06 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் இந்திய அணி அறிவிப்பில், மிகவும் ஆச்சரியப்படத்தக்க ஒரு சேர்ப்பு தமிழகத்தின் இளம் வீரர் சாய் சுதர்சன். கடந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் இவருக்கு தமிழக அணியில் இடம் கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் கிடைத்தது.

இதற்கு அடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவருடைய பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் மிரட்டி விட்டார். மேலும் தமிழக அணிக்காகவும், துலிப் கோப்பை மற்றும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை இந்திய அணி என அவரது செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. குறிப்பாக லிஸ்ட் ஏ போட்டிகளில் மிக சிறப்பாக இருக்கிறது.

இந்த நிலையில் எல்லோரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜெயஸ்வாலுக்கு தரப்படாத வாய்ப்பு சாய் சுதர்சனுக்கு தரப்பட்டு இருக்கிறது. 

இந்த நிலையில் அவரை உத்வேகப்படுத்திய ஒரு விஷயம் குறித்து பேசிய சாய் சுதர்சன் “கிரஹாம் பென்சிங்கருடன் விராட் கோலியின் இன்டர்வியூ மிகவும் பிரபலமானது. தனித்தனி காணொளிக்களில் அவருடைய பயணத்தை பற்றி அவர் பேசுவார். அந்த காணொளி எனக்கு நிச்சயம் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. 

அவர் தன்னைத்தான் கண்ணாடியில் பார்ப்பதாகவும், தான் விரும்பும் வீரராக அவரை இருக்க விரும்பியதாகவும் கூறுவார். அந்த காணொளி எனக்கு மிகவும் உதவியது. அதிலிருந்து நான் பெரிய ஒன்று தான் பெற்றேன். அது லாக் டவுன் நேரம். அந்த நேரத்தில் அவரது பேட்டி எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. நான் தீவிரமான பயிற்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

ஐபிஎல் தொடரின் போது அவரை நான் முதல் முதலாக சந்திக்க சென்றேன். அப்பொழுது அவர் சாய் எப்படி இருக்கிறீர்கள் என்று என் பெயரைச் சொல்லி கூப்பிட்டு பேசினார். நான் யாரைப் பார்த்து வளர்ந்தேனோ அவர் என் பெயரை சொல்லி கூப்பிட்டதும், அவருடன் ட்ரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொள்ள முடிந்ததும் எனக்கு மிகப்பெரிய விஷயம்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை