நண்பர்களாக இருந்தாலும் இப்போது நாங்கள் எதிரிகள் தான் - சாம் கரன் ஓபன் டாக்!

Updated: Sat, Aug 07 2021 12:37 IST
Image Source: Google

இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 23 வயது இளம் வேகப்பந்து வீச்சாளரான சாம் கரன் 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகி இதுவரை 21 டெஸ்ட் போட்டிகள், 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் கிரிக்கெட்டில் 30 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இங்கிலாந்து அணியின் நம்பிக்கைக்குரிய வீரராக தற்போது மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இடம்பெற்று விளையாடி வருகிறார். 

பந்துவீச்சு மட்டுமின்றி தனது பேட்டிங்கிலும் பலம் சேர்க்கும் சாம் கரன் அறிமுகமானதிலிருந்து இங்கிலாந்து அணிக்காக சிறப்பான ஆல் ரவுண்ட் பணியை செய்துவருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் முக்கிய வீரராக இடம்பெற்றுள்ள சாம் கரன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் தான் சிஎஸ்கே அணி வீரர்களுக்கு எதிராக விளையாடும் அனுபவம் குறித்து பேசியுள்ள அவர் கூறுகையில்,“ஐபிஎல் தொடரானது பல்வேறு வீரர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பையும், அவர்களிடம் அதிக நேரம் பேசும் தருணங்களையும் தருகிறது. மேலும் இவ்வாறு உலகில் உள்ள அனைத்து வீரர்களுடனும் கலந்துரையாடுவதால் என்னுடைய ஆட்டம் இன்னும் மேம்படுகிறது. 

சிஎஸ்கே அணிக்காக நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடி வருவது ஒரு அற்புதமான தருணம். சிஎஸ்கே அணியில் இருந்து பல விடயங்களை நான் கற்றுக் கொண்டுள்ளேன். ஏற்கனவே சிஎஸ்கே அணியுடன் விளையாடும் பொழுது ஜடேஜா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோருடன் நன்கு பழகி உள்ளேன்.

ஆனால் தற்போது டெஸ்ட் போட்டியில் நாங்கள் எதிரிகளாக விளையாடி வருகிறோம். ஐபிஎல் தொடரின்போது அவர்கள் இருவருமே எனக்கு மிகச்சிறந்த நண்பர்கள். ஆனால் இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் எங்களை எதிர்த்து விளையாடி கொள்வதால் எதிரிகளாக கருதி விளையாடி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை