உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அத்தனை அணிகளுக்கு பீதியை கொடுத்துள்ளது தரம்சாலா மைதானம். அந்த மைதானத்தில் நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் வீரர்கள் காயமடையாமல் இருந்ததே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தரம்சாலா மைதானத்தின் அவுட் ஃபீல்டு, அதாவது வீரர்கள் ஃபீல்டிங் செய்யும் பகுதியில் புற்களே இல்லாமல் உள்ளது.

Advertisement

வீரர்கள் தரையில் விழுந்து பந்தை பிடிக்க முயற்சி செய்தால், நிச்சயம் காயடைவார்கள். அந்த அளவிற்கு தரம்சாலா மைதானத்தின் அவுட் ஃபீல்டு மோசமாக உள்ளது. ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ட்ராட், இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் உள்ளிட்டோர் காட்டமாக விமர்சித்தனர். இதனால் பிசிசிஐ நிர்வாகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில் நேற்று தரம்சாலா மைதானத்தில் இங்கிலாந்து - வங்கதேசம் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியின் போது பவுலர்கள் ஓடி வந்து பவுலிங் செய்யவே திணறினார்கள். 

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் சாம் கரன் பேசுகையில், “தரல்சாலா மைதானம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த போட்டியின் போது வீரர்கள் யாரும் காயமடையவில்லை என்பதே எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் அணியில் மட்டுமல்ல, இரு அணிகளிலும் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. ஏனென்றால் வீரர்கள் காயமடையாமல் இருக்க வேண்டியது அவசியம். 

அதேபோல் இந்த மைதானத்தில் நாங்கள் மீண்டும் விளையாட தேவையில்லை. இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அவுட் ஃபீல்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றமடைந்து வருகிறது.ஐபிஎல் தொடரின் போது இதே மைதானத்தில் நாங்கள் விளையாடி இருக்கிறோம். தற்போது இந்த மைதானத்திற்கு என்னவானது என்றே தெரியவில்லை. ஆனால் தரம்சாலா பிட்ச் நன்றாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News