அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்து சாதனைகளை குவித்த சஞ்சு சாம்சன்!

Updated: Fri, Nov 08 2024 23:28 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

இதனை தொடர்ந்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 7 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 21 ரன்னிலும் அவுட் ஆகினர். ஆனால் இப்போட்டியொல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்ட ச்ஞ்சு சாம்சன் 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

இது சஞ்சு சாம்சனின் இரண்டாவது சர்வதேச டி20 சதமாகும். அதன்பின் 7 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 107 ரன்களை எடுத்திருந்த நிலையில் சஞ்சு சாம்சன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 33 ரன்களில் திலக் வர்மாவும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களும் சோபிக்க தவறியதால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து மிரட்டிய சஞ்சு சாம்சன் சில சாதனைகளையும் படைத்து அசத்தினார். அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் வீரர் எனும் சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். முன்னதாக சஞ்சு சாம்சன் வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சதமடித்து அசத்தினார். மேலும் உலகளவில் இந்த சாதனையை படைக்கும் நான்காவது வீரர் சஞ்சு சாம்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக இரண்டு சதங்களை விளாசிய விக்கெட் கீப்பர் எனும் சாதனையை அவர் தன் பெயரில் வைத்துள்ளார். அதேசமயம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலிலும் கேஎல் ராகுலுடன் மூன்றாம் இடத்தை சஞ்சு சாம்சன் பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் வீரர் ரோஹித் சர்மா முதலிடத்திலும், சூர்யகுமார் யாதவ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 

Also Read: Funding To Save Test Cricket

மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகவேமாக சதமடித்த இந்திய வீரர் எனும் சூர்யகுமார் யாதவின் சாதனையையும் சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார். முன்னதாக சூர்யகுமார் யாதவ் 55 பந்துகளில் சதமடிததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் சதமடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 59 பந்துகளில் சதமடித்து மூன்றாம் இடத்தில் உள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை