எங்களுக்கு இன்னும் இரண்டு காலிறுதி போட்டிகள் உள்ளன - சஞ்சு சாம்சன்!

Updated: Fri, May 12 2023 12:21 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 47 பந்தில் 98 ரன்களும், சாம்சன் 29 பந்தில் 48 ரன்களும் எடுத்தனர். மேலும் இப்போட்ட்டியின் ஆட்டநாயகன் விருது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்பட்டது. 

வெற்றிக்குப் பின் பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், “இன்று நான் எதுவும் செய்ய வேண்டியதாக இல்லை. கையில் பேட்டை பிடித்துக்கொண்டு எதிரில் ஜெய்ஸ்வால் விளையாடுவதை பார்த்தேன். பவர் பிளேவில் அவர் எப்படி விளையாடுவார் என்று பந்துவீச்சாளர்களுக்குக் கூட தெரியும். அவர் பவர் பிளேவில் பேட்டிங் செய்வதை என்ஜாய் பண்ணுகிறார்.

சாகலுக்கு லெஜெண்ட் என்ற அடையாளத்தை வழங்க வேண்டிய நேரம் இது. அவரை எங்கள் அணியில் வைத்திருப்பதற்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். அவரிடம் எதுவும் சொல்ல வேண்டியதில்லை பந்தை வீசச் சொல்லிக் கொடுத்தால் போதும். என்ன செய்வதென்று அவருக்கே தெரியும். அவர் இறுதிக்கட்ட ஓவர்களிலும் சிறப்பாக வீசுகிறார். ஒரு கேப்டனாக எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய பௌலராக இருக்கிறார்.

இன்னும் எங்களுக்கு இரண்டு கால் இறுதி ஆட்டம் இருக்கிறது. எங்களுக்கு இன்னும் அழுத்தம் இருக்கிறது. நாங்கள் விளையாடும் அனைத்து போட்டிகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். ஜெய்ஸ்வால் பட்லர் பேட்டிங் போது ரன் அவுட் ஆனவுடன் பட்லர் ஜெய்ஸ்வாலே சமாதானப்படுத்தி சென்றதை பார்த்தாலே எங்கள் அணியின் சூழல் எப்படி இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை