பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது தொடக்கத்திலேயெ டாப் ஆர்டர் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் பாகிஸ்தான் அணியானது 16 ரன்களுக்குளாகவே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது

Advertisement

.இதனையடுத்து இணைந்த சைம் அயூப் மற்றும் சௌத் ஷகீல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் இணைந்து 98 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். இதில் சைம் அயூப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்கள் எடுத்த நிலையில் சைம் அயூப் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் ஷகீலும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

Advertisement

அவருக்கு துணையாக அடுத்து களமிறங்கிய முகமது ரிஸ்வானும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியானது 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணி தரப்பில் சௌத் ஷகீப் 57 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 24 ரன்களைளுடன் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் இருவரும் இணைந்து அபாரமாக விளையாடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

 

அதுமட்டுமின்றி தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதமடித்தும் அசத்தினர். இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டன் சௌத் ஷகீல் சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் எனும் சாதனையை சௌத் ஷகீல் படைத்துள்ளார். இதற்கு முன் அந்த அணியின் சஹீத் அஹ்மத் 20 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், சௌத் ஷகீலும் 20 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார். 

அதன்பின்னரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் ஷகீல்141 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணியானது தற்போதுவரை முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 365 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் முகமது ரிஸ்வான் 133 ரன்களுடனும், அகா சல்மான் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மெஹிதி ஹசன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News