SAvsPAK: ரிஸ்வான் அதிரடியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி!

Updated: Sat, Apr 10 2021 22:03 IST
Image Source: Google

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதல் டி20 போட்டி ஜஹென்னஸ்பர்கில் இன்று தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய ஐய்டன் மார்க்ரம் - மாலன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

பின்னர் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மாலன் ஆட்டமிழக்க, தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்ரம் அரைசதம் கடந்த கையோடு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். 

இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக மார்க்ரம் 51 ரன்களையும், கிளாசன் 50 ரன்களையும் சேர்த்தனர்.

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் பாபர் அசாம் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழக்க பாகிஸ்தான் அணி தடுமாறியது. 

இருப்பினும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது ரிஸ்வான் அரைசதம் அடித்தது மட்டுமல்லாமல், இறுதிவரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியையும் தேடித்தந்தார். 

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 74 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவிய முகமது ரிஸ்வான் ஆட்டநாயகானத் தேர்வுசெய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை