கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி, டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஷஃபாலி வர்மாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார். 2020 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார் ஹரியாணாவைச் சேர்ந்த 17 வயது ஷஃபாலி வர்மா.
Advertisement
இந்நிலையில் டி20 தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார் ஷஃபாலி வர்மா. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறாத பெத் மூனியை விடவும் இரு புள்ளிகள் கூடுதலாகப் பெற்று நம்பர் 1 இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
Advertisement
எனினும் கடைசியாக விளையாடிய 6 சர்வதேச டி20 ஆட்டங்களில் ஷஃபாலி வர்மா ஒருமுறை மட்டுமே 18 ரன்களைத் தாண்டினார். நான்கு முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.