ஐபிஎல் 2022: தோற்றாலும் பெருமையாக இருக்கு - ஷாருக் கான் 

Updated: Tue, Apr 19 2022 13:00 IST
Image Source: Google

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்தது. 216 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கடைசி 4 ஓவர்களி்ல் கொல்கத்தா அணி வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 17-வது ஓவரை சஹல் வீசியபோதுதான் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. ஒரே ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சஹல் கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சியளித்தார். 

அதிலும், செட்டில் ஆன பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யரை 85 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டியதிருந்தது. மெக்காய் கடைசி ஓவரை வீசி உமேஷ் யாதவ், ஜாக்ஸனை வீழ்த்தி வெற்றி தேடித்தந்தார்.

ராஜஸ்தான் அணிக்கு, ஜாஸ்பட்லர் 61 பந்துகளில் அடித்த அற்புதமானசதம்(103ரன்கள், 6 சிக்ஸர், 9பவுண்டரி) மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு உதவியாக இருந்தது. இதற்கு பதிலடியாக கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் 85 ரன்கள் சேர்த்தாலும் சஹலிடம் விக்கெட்டை பறிகொடுத்தது தோல்விக்கு வித்திட்டது.

கொல்கத்தா அணி கடைசி ஓவர்வரை வெற்றிக்காகப் போராடிதோற்றது. தோல்வியால் வீரர்கள் துவண்டுவிடக்கூடாது என்பதற்காக அந்த அணியின் உரிமையாளர் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் ட்விட்டரில் உற்சாகப்படுத்தியுள்ளார்.

 

அவர் பதிவிட்ட கருத்தில் “ அருமையாக விளையாடினிங்க பாய்ஸ். ஸ்ரேயாஸ் அய்யர், ஆரோன் பின்ச், உமேஷ் ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்காக முயற்சித்தார்கள். சுனில் நரேனுக்கு 150வது இன்னிங்ஸ், மெக்குலத்துக்கு. நாம் தோற்றுவிட்டோம் என்பது எனக்குத் தெரியும். அதனால் புள்ளிப்பட்டியலில் கீழே இறங்கினாலும், போராடித் தோற்கணும். தோற்றாலும் இப்படி தோற்றணும் உற்சாமா இருங்கள் பாய்ஸ்” எனத் தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை