கோவை: டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராம் அரவிந்த் மற்றும் சதுர்வேத் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

Advertisement

டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை வென்ற மதுரை அணி பந்துவீசுவதாக அறிவிக்க, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கோவை அணிக்கு ஜித்தேந்திர குமார் மற்றும் லோகேஷ்வர் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் லோகேஷ்வர் 20 ரன்னிலும், ஜித்தேந்திர குமார் 17 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பாலச்சந்தர் சச்சினும் 15 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். 

Advertisement

மேற்கொண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே சித்தார்த் 20 ரன்களிலும், மாதவ் பிரசாத் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் அபாரமாக விளையாடிய கேப்டன் ஷாருக் கான் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 77 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களைச் சேர்த்தது. மதுரை அணி தரப்பில் முருகன் அஸ்வின், சரவணன், விக்னேஷ் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ராம் அரவிந்த் மற்றும் பாலச்சந்தர் அனிருத் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அனிருத் 37 ரன்களுக்கும், மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய ராம் அரவிந்த் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 64 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மேற்கொண்டு களமிறங்கிய ஆதீக் உர் ரஹ்மான் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். 

Also Read: LIVE Cricket Score

இப்போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய கேப்டன் சதுர்வேத் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 46 ரன்களையும், சரத் குமார் 8 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு டிஎன்பிஎல் தொடரில் மதுரை பாந்தர்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News