உலகக்கோப்பை தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி சாதனை!

Updated: Fri, Oct 20 2023 21:28 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. சிறிய பவுண்டரி எல்லைகளை கொண்ட மைதானம் என்பதால் எப்படியும் ஆஸ்திரேலியா 300 ரன்களை தாண்டும் என பலரும் எதிர்பார்த்தனர். அதே போலவே, ஆஸ்திரேலியா அணி அதிரடி ஆட்டம் விளையாடியது. 

குறிப்பாக தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் இருவரும் சதம் அடித்து பாகிஸ்தான் அணியை சிதறவிட்டனர். ஆனால், இவ்வளவுக்கு நடுவிலும் தன் திறமையை காட்டினார் ஷஹீன் ஷா அப்ரிடி. இந்தப் போட்டியில், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். அதன் பின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட்டை சாய்த்தார். கடைசி ஓவரில் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட் விக்கெட்டை அடுத்தடுத்த பந்துகளில் சாய்த்தார்.

இந்த உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக 5 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஷஹீன் ஷா அஃப்ரிடி பெற்றுள்ளார். மேலும் உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை இரண்டு முறை ஒரே போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

உலகக்கோப்பை தொடர்களில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தில் இருப்பது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி. அவரது சாதனையை தற்போது அவரது மருமகன் ஷஹீன் ஷா அஃப்ரிடி சமன் செய்துள்ளார். இதே உலகக்கோப்பையில் இன்னும் ஒரு முறை ஒரு போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தினால் மாமனாரை மிஞ்சிய மருமகன் ஆகி விடுவார் ஷஹீன்.

 

2023 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு தான் ஷஹீன் ஷா அஃப்ரிடி, ஷாஹித் அப்ரிடியின் மகளை திருமணம் செய்து கொண்டார். இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு கூட தான் 5 விக்கெட் வீழ்த்துவேன் என சவால் விட்டு இருந்தார். இப்போது அதை செய்து இருக்கிறார். ஆக, திருமணம் முடிந்த கையோடு உலகக்கோப்பை ஆட வந்த ஷஹீன் ஷா அப்ரிடி, மாமனாரின் சாதனையை முறியடிக்க துடித்து வருகிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை