வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சமீபத்தில் நடந்துமுடிந்தது. 

Advertisement

இப்போட்டியில் இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகித்து வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் எதிவரும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

Advertisement

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றாலோ அல்லது போட்டியை டிராவில் முடித்தாலும் கூட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தும். அதேசமயம் வங்கதேச அணியானது தொடர் இழப்பை தடுப்பதற்காக கடுமையாக போராடும் என்பதல் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் நட்சத்திர விரர் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியானது.

நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித்  பும்ரா பந்துவீச்சில் ஷாகிப் அல் ஹசன் காயமடைந்தார். இதனால் அவர் முதல் டெஸ்ட்டில் அதிகம் பந்துவீசவும் இல்லை. இதனையடுத்து ஷாகிப் அல் ஹசன தனது காயத்திற்காக சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவரது காயத்தை மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும், அவர் முழுமையான உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே கான்பூர் டெஸ்டில் விளையாட முடியும் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவார் என அந்த அணி பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க உறுதியளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தற்போது வரை நான் ஷாகிப் அல் ஹசனின் காயம் பற்றி அணியின் பிசியோவிடமோ அல்லது வேறு யாரிடமோ நான் இதுவரை எதுவும் கேட்கவில்லை.  மேலும் அவர் லெவனில் விளையாட தகுதியானவர். அணியில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அது மைதானத்தின் தன்மையைப் பொறுத்தது. 

முதல் டெஸ்ட் போட்டியில் அவரது ஃபார்ம் பற்றி நான் வருத்தப்படவில்லை. ஏனெனில் அவராலும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன். அவருடைய திறமை என்ன என்பதை நாங்கனை அனைவரும் அறிவோம். மேலும் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் நன்றாக பேட்டிங் செய்தார் என்று நினைக்கிறேன். அதனால் அவரால் அணியின் வெற்றிக்கு தேவையான பங்களிப்பை வழங்க முடியும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 

Advertisement

இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் , ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.

வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஸாத்மன் இஸ்லாம், ஜாகிர் ஹாசன், மோமினுல் ஹேக், முஸ்ஃபிக்கூர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹாசன் மிராஸ், ஜேக்கர் அலி, தஸ்கின் அகமது, ஹசன் மஹ்முத், நஹித் ராணா, தைஜுல் இஸ்லாம், மஹ்முதுல் ஹாசன் ஜாய், நயீம் ஹசன், காலித் அகமது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News