எல்லை மீறிய ஷகிப் அல் ஹசனுக்கு விளையாட தடை - தகவல்!

Updated: Sun, Jun 13 2021 14:40 IST
Image Source: Google

வங்கதேசத்தின் உள்ளூர் டி20 லீக் தொடரான தாக்க பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மோஹம்மெதான் ஸ்போர்டிங் கிளப் - அபஹானி லிமிடேட் அணிகள் மோதின.

இப்போட்டியின் போது வங்கதேச அணியின் தனது சக வீரரான முஷ்பிகுர் ரஹீமுக்கு பந்து வீசிய ஷகிப் அல் ஹசன்,எல்.பி.டபிள்யூ அப்பீலை ஷகிப் கேட்க, அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், நிதானத்தை இழந்த ஷாகிப் அல் ஹசன் அங்கேயே ஸ்டெம்ப்புகளை நோக்கி ஓங்கி உதைத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அதோடு நிற்காமல், கள நடுவருடன் கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார்.

அதன் பிறகு, அபஹானி அணி 5.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்த போது, திடீரென மழை குறுக்கிட, அம்பயர் ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். உடனே, பீல்டிங் செய்த இடத்தில் இருந்து கள நடுவரை நோக்கி வேகமாக வந்த ஷகிப், ஸ்டெம்ப்புகளையும் கையோடு பிடிங்கி, தரையில் வீசினார்.

இதையடுத்து ஷகிப் அல் ஹசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பும் கோரினார். இந்நிலையில் மைதானத்தில் சர்ச்சைகுரிய முறையில் நடந்து கொண்ட ஷகிப் அல் ஹசனிற்கு தாக்கா பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலின் படி, டாக்கா முகமதியன் விளையாட்டுக் கழக கிரிக்கெட் கமிட்டி தலைவர் மசூடுஸ்மான், ஷகிப் அல் ஹசன் நான்கு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பதாக  கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிடும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை