சாதனையளர்கள் பட்டியளில் இணைந்த ஷாகில் அல் ஹசன்!

Updated: Tue, Mar 07 2023 11:21 IST
Shakib Al Hasan completes 300 ODI wickets! (Image Source: Google)

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. அதன்படி நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணியானது 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் குவித்தது.

பின்னர் 247 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 43.1 ஓவரில் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் பேட்டிங்கில் 75 ரன்களையும் பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளையும் எடுத்து அசத்திய வங்கதேச அணியின் முன்னணி ஆல் ரவுண்டான ஷாகிப் அல் ஹசன் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி ஆகியோருக்கு அடுத்து தனித்துவமான சாதனை ஒன்றினை புரிந்து வரலாறு படைத்துள்ளார். அந்த வகையில் ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது ஆல்ரவுண்டர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் ரேகன் அகமதுவின் விக்கெட்டை வீழ்த்திய ஷாகிப் அல் ஹசன் ஒருநாள் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வங்கதேச பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 13 வீரர்கள் மட்டுமே 300 விக்கெட்டுகளை கடந்த வீரர்கள் என்ற பட்டியலில் இருந்த வேளையில் தற்போது 14ஆவது வீரராக சாகிப் அல் ஹசனும் இணைந்துள்ளார்.

அதுமட்டும் இன்றி டேனியல் வெட்டோரி மற்றும் ஜெயசூர்யா ஆகியோருக்கு பிறகு 300 விக்கெட்டை கைப்பற்றிய மூன்றாவது இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை