உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய ஷாகிப் அல் ஹசன்; காரணம் என்ன?

Updated: Tue, Nov 07 2023 18:41 IST
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய ஷாகிப் அல் ஹசன்; காரணம் என்ன? (Image Source: Google)

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. ஆனால் அதை விட  இப்போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது அந்த போட்டியில் பேட்டிங் செய்வதற்காக களத்திற்கு வந்த மேத்யூஸ் முதல் பந்தை எதிர்கொள்வதற்கு முன்பாக ஹெல்மெட் பழுதாக இருந்ததை பார்த்தார்.

அதனால் தன்னுடைய அணியிடமிருந்து புதிய ஹெல்மட்டை வாங்கிய அவர் வேண்டுமென்ற நேரத்தை தாமதம் செய்வதாக புகார் செய்த வங்கதேச அணியினர் நடுவரிடம் அவுட் கொடுக்குமாறு கேட்டனர். அதை பரிசீலித்த நடுவர்கள் மேத்யூஸ் அவுட்டென அறிவித்தது அனைவரையும் ஆழ்த்தியது. இருப்பினும் பேட்ஸ்மேன் அவுட்டாகி சென்ற பின் அடுத்த பந்தை எதிர்கொள்வதற்கு 2 நிமிடத்திற்குள் வர வேண்டிய மேத்யூஸ் தாமதமாக வந்ததால் 143 வருட கிரிக்கெட்டில் கால தாமதத்தால் அவுட்டான முதல் வீரர் என்ற பரிதாப சாதனை படைத்தார்.

பொதுவாக விதிப்படி இது அவுட் என்றாலும் எதிரணிகள் இது போன்ற நியாயமான காரணங்களால் தாமதம் ஆனால் அவுட் கேட்க மாட்டார்கள். ஆனால், ஷாகிப் அல் ஹசன் அவுட் கேட்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது.  இந்த சம்பவம் நடந்த பின் இலங்கை - வங்கதேச வீரர்கள் இடையே பல வார்த்தை மோதல்கள் நடந்தன. போட்டிக்கு பின் இலங்கை வீரர்கள் கை குலுக்க வரவில்லை. இந்த நிலையில், இதற்கு மறுநாள் ஷாகிப் அல் ஹசன் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் அந்தப் போட்டியில் பேட்டிங் செய்த போது இடது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. வலியுடன் விளையாடிய அவர் போட்டிக்கு பின் ஸ்கேன் எடுத்து பார்த்த போது எலும்பு முறிவு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து அவர் விரைவில் வங்கதேசம் திரும்ப உள்ளார். உலகக்கோப்பை தொடரில் வங்கதேசம் அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மோத உள்ளது. நவம்பர் 11 அன்று அந்த போட்டி நடக்க உள்ள நிலையில், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அணியை விட்டு பிரிந்து செல்ல இருக்கிறார். 

ஏற்கனவே அந்த அணி புள்ளிப் பட்டியலில் முதல் எட்டு இடங்களுக்குள் வந்து சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும் என போராடி வருகிறது வங்கதேசம். அதன் ஒரு பகுதியாக இலங்கை அணியை வீழ்த்தி கடைசி போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா அணியை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. இந்த நிலையில், ஷாகிப் இழப்பு அந்த அணிக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

அது மட்டுமின்றி வங்கதேசம் அடுத்ததாக நவம்பர் 27 முதல் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. 

வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் உலகக்கோப்பை தொடரில் பெரும் சர்ச்சையில் சிக்கி விவாதத்தை கிளப்பிய நிலையில், மறுநாளே உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கிறார்.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. ஆனால் அதை விட  இப்போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது அந்த போட்டியில் பேட்டிங் செய்வதற்காக களத்திற்கு வந்த மேத்யூஸ் முதல் பந்தை எதிர்கொள்வதற்கு முன்பாக ஹெல்மெட் பழுதாக இருந்ததை பார்த்தார்.

அதனால் தன்னுடைய அணியிடமிருந்து புதிய ஹெல்மட்டை வாங்கிய அவர் வேண்டுமென்ற நேரத்தை தாமதம் செய்வதாக புகார் செய்த வங்கதேச அணியினர் நடுவரிடம் அவுட் கொடுக்குமாறு கேட்டனர். அதை பரிசீலித்த நடுவர்கள் மேத்யூஸ் அவுட்டென அறிவித்தது அனைவரையும் ஆழ்த்தியது. இருப்பினும் பேட்ஸ்மேன் அவுட்டாகி சென்ற பின் அடுத்த பந்தை எதிர்கொள்வதற்கு 2 நிமிடத்திற்குள் வர வேண்டிய மேத்யூஸ் தாமதமாக வந்ததால் 143 வருட கிரிக்கெட்டில் கால தாமதத்தால் அவுட்டான முதல் வீரர் என்ற பரிதாப சாதனை படைத்தார்.

பொதுவாக விதிப்படி இது அவுட் என்றாலும் எதிரணிகள் இது போன்ற நியாயமான காரணங்களால் தாமதம் ஆனால் அவுட் கேட்க மாட்டார்கள். ஆனால், ஷாகிப் அல் ஹசன் அவுட் கேட்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது.  இந்த சம்பவம் நடந்த பின் இலங்கை - வங்கதேச வீரர்கள் இடையே பல வார்த்தை மோதல்கள் நடந்தன. போட்டிக்கு பின் இலங்கை வீரர்கள் கை குலுக்க வரவில்லை. இந்த நிலையில், இதற்கு மறுநாள் ஷாகிப் அல் ஹசன் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் அந்தப் போட்டியில் பேட்டிங் செய்த போது இடது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. வலியுடன் விளையாடிய அவர் போட்டிக்கு பின் ஸ்கேன் எடுத்து பார்த்த போது எலும்பு முறிவு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து அவர் விரைவில் வங்கதேசம் திரும்ப உள்ளார். உலகக்கோப்பை தொடரில் வங்கதேசம் அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மோத உள்ளது. நவம்பர் 11 அன்று அந்த போட்டி நடக்க உள்ள நிலையில், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அணியை விட்டு பிரிந்து செல்ல இருக்கிறார். 

ஏற்கனவே அந்த அணி புள்ளிப் பட்டியலில் முதல் எட்டு இடங்களுக்குள் வந்து சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும் என போராடி வருகிறது வங்கதேசம். அதன் ஒரு பகுதியாக இலங்கை அணியை வீழ்த்தி கடைசி போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா அணியை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. இந்த நிலையில், ஷாகிப் இழப்பு அந்த அணிக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

அது மட்டுமின்றி வங்கதேசம் அடுத்ததாக நவம்பர் 27 முதல் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதன் காரணமாக அனமுல் ஹக் மாற்று வீரராகவும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ அணியின் கேப்டனாகவும் செயல்படுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை