யார்க்கரை வீச சொன்னது கோலி தான் - ஷர்துல் தாக்கூர்!

Updated: Thu, Jan 19 2023 14:03 IST
Image Source: Google

ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 349 ரன்கள் அடித்தது. இரட்டை சதம் அடித்து வரலாறு படைத்த ஷுப்மன் கில், 149 பந்துகளில் 19 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் உட்பட 208 ரன்கள் அடித்தார்.

அதன்பின், 350 ரன்கள் என்கிற இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சான்ட்னர் மற்றும் ப்ரேஸ்வெல் இருவரும் ஜோடி சேர்ந்து 7ஆவது விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தனர். சான்ட்னர் 57 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

பின்னர், 57 பந்துகளில் சதம் விளாசிய பிரேஸ்வெல், போட்டியின் கடைசி ஓவர் வரை போராடினார். 9 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூசிலாந்து அணிக்கு, கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய ஷர்துல் தாக்கூரை, பேய் பார்மில் இருந்த ப்ரேஸ்வெல் எதிர்கொண்டு முதல் பந்தை சிக்ஸர் அடித்தார். பதட்டத்தில் இருந்த தாக்கூர், இரண்டாவது பந்தை ஒயிடாக வீசினார்.

இறுதியில் 5 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டபோது, இரண்டாவது பந்தில் யார்க்கர் வீசி லாவகமாக எல்பிடபிள்யூ செய்து விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. போட்டி முடிந்தபின் பேட்டியளித்த தாக்கூர், “பேட்ஸ்மேனை விக்கெட் எடுக்க யார்க்கர் லெந்த்தில் வீசு என விராட் கோலி அறிவுறுத்தினார். அதைத்தான் நான் செய்தேன்.” என்றார்.

இறுதிவரை போராடிய மைக்கல் பிரேஸ்வெல் பேசுகையில், “ஆறு விக்கெட்கள் போன பிறகு எங்களிடம் எந்தவித திட்டமும் இல்லை இறுதிவரை போராடி வாய்ப்புகளை உருவாக்க முயற்சிப்போம் என்று விளையாடினோம் துரதிஷ்டவசமாக இவ்வளவு நெருக்கமாக வந்து தோல்வியடைந்து விட்டோம்.

நானும் சான்ட்னரும் களத்தில் நிலைத்து நின்ற பிறகு, போட்டியை வெல்ல முடியும் என்று நம்பினோம். ஆரம்பத்தில் வெல்ல முடியும் என்று நம்பவில்லை, இறுதிவரை ஆட்டத்தை எடுத்துச்சென்று போராடவேண்டும் என்று மட்டுமே திட்டமிட்டோம். நிறைய ஸ்கொர் அடிக்கவேண்டியது இருந்தது. எங்களது பெஸ்ட் கொடுத்தோம் என நினைக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை