ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸில் இணையும் ஷர்தூல் தாக்கூர்?

Updated: Sun, Mar 16 2025 22:00 IST
Image Source: Google

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு பிறகு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக பார்க்கப்பட்டவர் ஷர்துல் தாக்கூர். இந்திய டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்த ஷர்தூல் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் அவரால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. 

இந்நிலையில் தான் சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய ஷர்தூல் தாக்கூர், பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். அதிலும் குறிப்பாக அவ்ர் 9  போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 505 ரன்களையும், பந்துவீச்சில் 35 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

அதேசமயம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் ஷர்தூல் தாக்கூரை எந்த அணியும் ஒப்பந்த செய்யவில்லை. ஐபிஎல் தொடரில் இதுவரை 95 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் பேட்டிங்கில் ஒரு அரைசதம் உள்பட 307 ரன்களையும், பந்துவீச்சில் 94 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இருப்பினும் ஷர்தூல் தாக்கூரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், ஷர்தூல் தாக்கூர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதுமட்டுமின்றி, அவர் எல்எஸ்ஜியின் புதிய கேப்டன் ரிஷப் பந்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார். எல்.எஸ்.ஜி முகாமில் ஜெர்சி அணிந்து பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவரது பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால் அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸில் இணையவுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் தற்போதுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் பல பந்துவீச்சாளர்கள் இன்னும் ஐபிஎல் போட்டிக்கு முழுமையாக தகுதி பெறவில்லை. அதிலும் குறிப்பாக இந்திய பந்துவீச்சாளர்கள் மயங்க் யாதவ், ஆவேஷ் கான், மெஹ்சின் கான் உள்ளிட்டோரும் காயத்தால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் யாரெனும் ஒரு வீரர் முழு உடற்தகுதியை எட்டாத நிலையில், அவர்களுக்கு மாற்று வீரராக ஷர்தூல் தாக்கூரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளது. இதற்கு முன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ள ஷர்தூல் தாக்கூர், தற்சமயம் லக்னோ அணியிலும் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

 

Also Read: Funding To Save Test Cricket

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆயுஷ் பதோனி, ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், அப்துல் சமத், ஆர்யன் ஜூயல், ஆகாஷ் தீப், ஹிம்மத் சிங், சித்தார்த், திக்வேஷ் சிங், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, மேத்யூ பிரீட்ஸ்கே

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை