இந்திய அணியின் வெற்றிக்கு பிரித்வி ஷாவின் ஆட்டம் உதவியாக இருக்கும் - முகமது கைஃப்

Updated: Thu, Jul 15 2021 11:30 IST
Image Source: Google

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரில் விளையாட இலங்கை சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 18ஆம் தேதி கொழும்புவில் நடக்கிறது.

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர் பிரித்வி ஷா மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

ஏனெனில் கடந்த சீசன் உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் பிரித்வி ஷா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதன் காரணமாக இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், பிரித்வி ஷாவின் அதிரடியான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய முகமது கைஃப், “நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் பிரித்வி ஷா பல நல்ல ஆட்டங்களை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் சவால்கள் அதிகம் இருக்கும். அதனை எதிர்த்து நீங்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே உங்களுக்கான வாய்ப்பு நிரந்தரமாகும். 

பிரித்வி ஷா கடந்தாண்டு உள்ளூர் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவர் வரவுள்ள ஐபிஎல் தொடர் மற்றும் இலங்கை அணிக்கெதிரான தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் டி20 உலகக்கோப்பைக்கான வாய்ப்பையும் பெறுவார். அதனால் இத்தொடர்கலில் பிரித்வி ஷா பெரிய இன்னிங்ஸ்களை விளையாட வேண்டும்.

அதேசமயம் இவரது ஆட்டம் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகவும் அமையும். அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இலங்கை தொடரை இந்திய அணி எளிதில் வெல்லும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை