இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்துவது எனக்கு கிடைத்த மிகப்பெரும் கவுரவம் - ஷிகர் தவான் 

Updated: Sun, Jun 27 2021 23:30 IST
shikhar-dhawans-heart-wrenching-statement-before-the-sri-lanka-tour-said-bio-bubble-life-helped-the- (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியை அனுபவ வீரர் ஷிகர் தவான் வழிநடத்த உள்ளார்.

பெரும்பாலான சீனியர் வீரர்கள் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் தவான் இளைஞர்கள் அதிகம் கொண்ட அணியை வழிநடத்துகிறார். 

இந்நிலையில் நாளைய தினம் தவான் தலைமையிலான இந்திய அணி, தனி விமானம் மூலம் இலங்கை செல்லவுள்ளது. இதற்கிடையில் கேப்டன் ஷிகர் தவான், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது பேசிய தவான் “இந்திய அணியின் கேப்டனாக அணியை நான் வழிநடத்த உள்ளது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய ஏ அணிக்காக நான் வங்கதேச தொடரில் கேப்டனாக விளையாடி உள்ளேன். அவர் இந்த தொடரில் பயிற்சி அளிக்க உள்ளது சிறப்பானது. ஒரு அணியாக நாங்கள் இணைந்து நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். தொடருக்காக சிறப்பாக தயாராகி வருகிறோம்” என தெரிவித்துள்ளார். 

மேலும் ராகுல் டிராவிட் அணிக்கு பயிற்சி அளிக்க உள்ளதையும், ஷிகர் தவான் இந்திய அணியை வழிநடத்த உள்ளதையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்று ட்வீட் செய்து வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை