ஐபிஎல் 2025: தொடரிலிருந்து விலகிய ரோவ்மன் பாவெல்; இளம் வீரரை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், 6 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற இருந்த ரயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் ஒத்திவைக்கப்பட்டதன் காரணமாக, நடப்பு சாம்பியன் கேகேஆர் அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளது.
இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மே 25ஆம் தெதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தங்களுடைய கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக கேகேஆர் அணி மிகப்பெரும் மாற்றத்தை செய்துள்ளது. அதன்படில் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரோவ்மன் பாவெல் தொடரில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளது.
அதன்படி ரோவ்மான் பாவெல் தனது காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்தியா பிரதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷிவாம் சுக்லாவை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ஷிவம் சுக்லா இதுவரை 8 டி20 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்திவுள்ளார். இருப்பினும் அவருக்கு கடைசி லீக் போட்டியில் லெவனில் இடம் கிடைக்குமா என்பது தற்போது வரையிலும் கேள்விக்குறியாகவே உள்ளது.
Also Read: LIVE Cricket Score
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்கியா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர் (துணைக்கேப்டன்),ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங், குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அன்ரிச் நோர்ட்ஜே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி வைபவ் அரோரா, மயங்க் மார்கண்டே, ஸ்பிர்மன் பாண்டே பவல், ஸ்பிர்மன் பான்டே பவல் , அனுகுல் ராய், மொயின் அலி, சேத்தன் சகாரியா.