டி20 உலகக்கோப்பை நமது இலக்கல்ல - பாகிஸ்தான் வீரர்களுக்கு அக்தரின் அட்வைஸ்!

Updated: Sun, Jul 18 2021 00:19 IST
Image Source: Google

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆன பாகிஸ்தான் அணி, டி20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.

பாகிஸ்தான் அணி டி20 போட்டியில் நன்றாக ஆடி வெற்றி பெற்றாலும், அந்த அணி நிர்வாகத்தின் செயல்பாடு, வீரர்களின் ஆட்டம், ஃபிட்னெஸ் என எந்தவிதத்திலும் பாகிஸ்தான் அணி மீது நல்ல அபிப்ராயம் இல்லாத அக்தர், பாகிஸ்தான் அணி குறித்த நிதர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அக்தர்,“பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் நன்றாக விளையாடுகிறது. ஆனால் அதுதான் அந்த அணியின் பிரச்னையும் கூட. ஏனெனில், டி20 போட்டியை போலவே ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி 50 ஓவர்கள் முழுமையாக ஆடாமல் ஆல் அவுட்டாகிறது. அதுதான் அந்த அணியின் பிரச்னையாக உள்ளது. 

பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பையை வென்றால் கூட அது பெரிய ஆச்சரியமில்லை. ஆனால், டி20 உலக கோப்பையை வென்றுவிட்டால், உடனே பாகிஸ்தான் அணி சரியான திசையில் தான் சென்றுகொண்டிருக்கிறது என்று ஒருபோதும் நான் கூற மாட்டேன்.

டி20 கிரிக்கெட் ஒருபோது நமது இலக்கு அல்ல. அது நமது இலக்காகவும் இருக்கக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை