அணியில் இடம் கிடைக்காதது குறித்து மௌனம் கலைத்த சோயிப் மாலிக்!

Updated: Fri, Oct 14 2022 11:49 IST
Image Source: Google

டி20 உலககோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள் பாகிஸ்தான் அணியில் நடுவரிசை மிகவும் சொதப்பலாக உள்ளது. தொடக்க வீரர் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வானை தவிர மற்ற வீரர்கள் சொதப்பி வருகின்றனர். இது பாகிஸ்தான் அணியின் பெரிய குறையாக பார்க்கப்படுகிறது. சோயிப் மாலிக் நீக்கப்பட்டதாலேயே பாகிஸ்தான் அணியின் நடுவரிசை பலவீனமாக காட்சி அளிப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது 40 வயதான சோயிப் மாலிக், பாகிஸ்தானில் நடைபெற்ற உள்நாட்டு டி20 தொடரான நேசனல் கப் ஆட்டத்தில் 204 ரன்களை அடித்துள்ளார். இதில் 2 அரைசதங்கள் அடங்கும். அந்த தொடரில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 140.68 ஆகும். இதே போன்று நடப்பாண்டில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் 11 இன்னிங்சில் 401 ரன்களை விளாசினார்.

இதில் 3 அரைசதம் அடங்கும். சோயிப் மாலிக்கின் ஸ்ட்ரைக் ரேட் 137 ஆக இருந்தது. இந்த நிலையில், சோயிப் மாலிக் கடந்த உலககோப்பை தொடருக்கு பிறகு நடைபெற்ற டி20 தொடரில் வங்கதேத்தை தவிர வேறு எந்த தொடரில் தேர்வாக வில்லை. இவ்வளவு சிறப்பாக செயல்பட்டும், முழு உடல் தகுதியிடன் இருந்தும் சோயிப் மாலிக் சேர்க்கப்படவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சோயிப் மாலிக், “டி20 உலககோப்பை அணியில் சேர்க்கப்படாதது குறித்து வருத்தமும், ஏமாற்றமும் இல்லை. என்னுடைய பணி கிரிக்கெட் விளையாடுவது. அதனை நான் சிறப்பாக செய்தேன். என்னை தேர்வு செய்வதும், செய்யாததும் தேர்வுக்குழுவினரின் கையில் உள்ளது. எது நடந்தாலும் பாசிட்டிவாக எடுத்து கொண்டு வாழ வேண்டும். இதுவே எனது குணம்.

பாபர் அசாமிடம் எனக்கு நல்ல நட்பு உள்ளது. அதற்காக பாபர் அசாமிடம் சென்று என்னை அணியில் எடுங்கள் என்று கட்டாயப்படுத்த முடியாது. அவர் கேப்டனாக அவருடைய பணியை செய்கிறார். அதில் நான் எந்த தடங்கலையும் செய்யவில்லை. இதே போன்று தேர்வுக்குழுவினரிடமும் சென்று நான் கட்டாயப்படுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

அதிகம் பார்க்கப்பட்டவை