IND vs SL, 2nd Test: ரோஹித் சர்மாவுக்கு அறிவுரை வழங்கிய சுனில் கவாஸ்கர்!

Updated: Fri, Mar 11 2022 17:51 IST
Image Source: Google

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் ஜடேஜா அபாரமாக பேட்டிங் ஆடி அதிகபட்சமாக 175 ரன்களை குவித்தார். ரிஷப் பண்ட் 96 ரன்களையும், அஷ்வின் 61 ரன்களையும் அடித்த நிலையில், தொடக்க வீரர் ரோஹித் சர்மா 29 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா அதிரடியாகத்தான் தொடங்கினார். நல்ல டச்சில் பெரிய ஷாட்டுகளை அருமையாக ஆடினார். 27 பந்திலேயே 29 ரன்களை அடித்தார். ஆனால் அவர் எதிர்கொண்ட 28வது பந்தில் புல் ஷாட் ஆடி, டீப் ஃபைன் லெக் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ரோஹித் சர்மா பவுன்ஸர் வீசினால், அவரது ஃபேவரைட் ஷாட்டான புல் ஷாட் ஆடுவார் என்பதை அறிந்து, அதையே அவருக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தி அவரை வீழ்த்திவிடுகின்றன. இலங்கை அணியும் அதைத்தான் செய்தது. ரோஹித் சர்மா ஷார்ட் பிட்ச் பந்துகளை புல் ஷாட் ஆடுவார் என்பதறிந்து, டீப் ஃபைன் லெக் திசையில் ஃபீல்டரை நிறுத்தி வேகமாக பவுன்ஸர் வீசி ரோஹித்தை வீழ்த்திவிட்டனர்.

நாளை(மார்ச் 12) 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் தொடங்கவுள்ள நிலையில், ரோஹித் சர்மாவுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.

இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், “ரோஹித் சர்மா புல் ஷாட் நன்றாக ஆடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் மற்ற ஷாட்டுகளும் நன்றாக ஆடுவார். அனைத்து பவுலர்களும் அவருக்கு எதிராக பவுன்ஸர்களை ஆயுதமாக பயன்படுத்தி அவரை புல் ஷாட் ஆடி வீழ்த்துகின்றனர். ரோஹித் புல் ஷாட் ஆடி ஒன்றிரண்டு பவுண்டரி, சிக்ஸர்களை அடிப்பதை பற்றி எதிரணி பவுலர்கள் கவலைப்படுவதில்லை. அவரது விக்கெட்டை வீழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது என்பதை பாசிட்டிவாகத்தான் பார்க்கிறார்கள். எனவே  ரோஹித் களத்தில் செட்டில் ஆகி 80, 90 ரன்கள் அல்லது சதம் அடிக்கும் வரை புல் ஷாட் ஆடக்கூடாது” என்று அறிவுறுத்தியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை