ஷமிக்கு அட்வஸ் வழங்கிய அஃப்ரிடி; ரசிகர்கள் விமர்சனம்!

Updated: Mon, Nov 14 2022 21:48 IST
"Shouldn't Do Things That Spread...": Shahid Afridi on Mohammed Shami's 'Karma' Tweet (Image Source: Google)

டி20 உலக கோப்பை வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையை 2வது முறையாக வென்றது. இந்த டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏமாற்றமளித்தன. 

இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்றது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கே முன்னேறவில்லை. நியூசிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது. முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை  வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், 2ஆவது அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்திய அணி தோற்ற நிலையில், இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் தகுதி இந்திய அணிக்கு இல்லை என்று ஷோயப் அக்தர் கிண்டலடித்தார்.

இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் தோற்று கோப்பையை இழந்ததும், ஷோயப் அக்தர் இதயம் உடைந்த மாதிரி எமோஜியை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு, மன்னிக்கவும் சகோதரரே.இதற்கு பெயர் தான் கர்மா என்று அக்தருக்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில், ஷமிக்கு அறிவுரை கூறியுள்ளார் ஷாஹித் அஃப்ரிடி. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஷாஹித் அஃப்ரிடி, “நாமெல்லாம் கிரிக்கெட்டர்கள். நாம் நமது நாடுகளின் தூதுவர்கள், முன்மாதிரிகள். எனவே இதுமாதிரியான விஷயங்களுக்கெல்லாம் முடிவுகட்ட வேண்டும். விளையாட்டின் மூலம் நமது உறவு மேம்பட வேண்டும். வெறுப்புணர்வை பரப்பக்கூடாது” என்று ஷமிக்கு அறிவுரை கூறும் விதமாக பேசியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை