WI vs IND, 5th T20I: அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த ஸ்ரேயாஸ் - வைரல் காணொளி!

Updated: Sun, Aug 07 2022 23:28 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி 3 போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷன் 11 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான ஸ்ரேயஸ் ஐயர் 64 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இதன்பின் வந்த தீபக் ஹூடா 38 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 15 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 28 ரன்களிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 188 ரன்கள் குவித்துள்ளது.

 

இந்நிலையில் இப்போட்டியில் அரைசதமடித்த ஸ்ரேயாஸ் ஐயரின் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை