தன் வாழ்வின் மோசமான பக்கம் குறித்து மனம் திறந்த ஸ்ரேயாஸ் ஐயர்!

Updated: Tue, Mar 01 2022 13:42 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், டி20 கிரிப்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் 204 ரன்கள் அடித்துள்ளார்.

இதன் மூலம் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் நிரந்தர இடம் பிடித்தார். மேலும் ஐபிஎல் தொடரில் தாம் இழந்த கேப்டன் பதவி, கே.கே.ஆர். அணி மூலமாக அவருக்கு மீண்டும் கிடைத்தது.

இந்த நிலையில், தன் வாழ்நாளில் மோசமான பக்கத்தையும், அதனை எப்படி மீண்டு வந்தேன் என்பது குறித்தும் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி அளித்தார்.

அதில் பேசிய அவர், “2020ஆம் ஆண்டு நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடினேன். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தேன். பின்னர் அப்போது தான் எனக்கு காயம் ஏற்பட்டது. என் வாழ்நாளில் மோசமான நாட்கள் அவை. காயமும், மீண்டும் உடல் தகுதி அடைய எடுக்கும் முயற்சியும் மிகவும் கடுமையானவை. ஆனால் விளையாட்டு வீரர்கள் இதனை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.

எனக்கு காயம் ஏற்படாமல் இருந்திருந்தால், டெல்லி அணியும் என்னை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி இருக்க மாட்டார்கள். ஆனால் எல்லாம் நன்மைக்கே. கெட்டதிலும், ஒரு நல்லது என்பார்களே அது தான் என் வாழ்க்கையில் நடந்தது. காயத்திலிருந்து மீண்டு வந்த நாள் தற்போது சிறப்பாக விளையாடுகிறேன்.

இந்த ஆண்டு தொடக்கமும் எனக்கு சிறப்பானதாக இல்லை. தென் ஆப்பிரிக்க தொடரின் போது வயிற்று போக்கு இருந்தது. என் வாழ்நாளில் அப்படி ஒரு கண்டத்தை நான் சந்தித்தது இல்லை. சில நாட்களில் மட்டும் 6 கிலோ வரை குறைந்தேன். தற்போது தான் மீண்டு வருகிறேன்.

டி20 கிரிக்கெட்டில் டாட் பந்து என்பது மிகப் பெரிய குற்றச் செயல். கேப்டன் ரோஹித் சர்மா மீது நிறைய மரியாதை வைத்துள்ளேன். ஒரு வீரருக்கு ஆதரவு வழங்கி, அவரின் திறமையை அழகாக வெளி கொண்டு வருவார். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, அணியின் வெற்றிக்காக போராடுவோம். எங்கள் குறிகோள் டி20 உலககோப்பையை வெல்வது தான்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை