அவரது வருகை அணியை பலப்படுத்தும் - ரவி பிஷ்னோய்!

Updated: Fri, Dec 01 2023 12:10 IST
அவரது வருகை அணியை பலப்படுத்தும் - ரவி பிஷ்னோய்! (Image Source: Google)

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 3ஆவது போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 2023 உலகக் கோப்பையை போல இந்த கோப்பையையும் எங்களை தாண்டி உங்களால் எளிதாக வெல்ல முடியாது என்பதை காண்பித்துள்ளது.

குறிப்பாக ருதுராஜ் கைக்வாட் 123 ரன்களை அடித்த உதவியுடன் இந்தியா நிர்ணயித்த 223 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கிளன் மேக்ஸ்வெல் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 104* ரன்கள் குவித்து வெற்றியை பறித்தார். அதனால் 2 – 1 என்ற கணக்கில் இருக்கும் இத்தொடரின் முக்கியமான 4ஆவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு ராய்ப்பூர் நகரில் நடைபெறுகிறது.

இதில் கடந்த போட்டியில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த பவுலிங் துறையில் சிறப்பாக விளையாடி வெற்றி காண இந்தியா தயாராகியுள்ளது. இந்த சூழ்நிலையில் 4 மற்றும் 5ஆவது போட்டிகளுக்கான இந்திய அணியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்துள்ளார்.

2023 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி தவிர்த்து எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் அபாரமாக விளையாடிய அவர் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே அவர் அணிக்குள் வருவது இந்தியாவை பலப்படுத்தும் என்ற நம்பிக்கை தெரிவிக்கும் இளம் வீரர் ரவி பிஷ்னோய் எஞ்சிய போட்டிகளில் வென்று இத்தொடரை கைப்பற்றுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஸ்ரேயாஸ் ஐயர் வருவது அணிக்குள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். எனவே டி20 கிரிக்கெட்டில் தரத்தையும் நட்சத்திர அந்தஸ்தையும் கொண்டுள்ள அவர் 2023 உலகக் கோப்பையில் நல்ல ஃபார்மில் விளையாடினார். எனவே அவர் அணியில் இணைவது பேட்டிங் வரிசையில் கண்டிப்பாக பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சீனியர் வீரராக வரும் அவருடைய அனுபவம் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

மேலும் இத்தொடரில் என்னுடைய பவுலிங் எனக்கு திருப்தியை கொடுக்கிறது. இதே போல எஞ்சிய போட்டிகளிலும் விளையாடி அணிக்காக தொடரை வெல்ல முயற்சிப்பேன். இப்போது 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நாங்கள் ராய்ப்பூரில் இத்தொடரை கைப்பற்ற முயற்சிப்போம். ஆஸ்திரேலியா அணியில் மேக்ஸ்வெல் போன்ற வீரர் கடைசி 2 போட்டியில் விளையாட மாட்டார். எனவே எஞ்சிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் உங்களுக்கு எதிராக நாங்கள் நன்றாக பந்து வீச முயற்சிப்போம்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை