முதல் போட்டிக்கு முன்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது; பிட்ச் குறித்து ஷுப்மன் கில்!
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது நேற்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 38 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 39 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்ஷன் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 63 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைச் சேர்த்தது. மும்பை இதரப்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் 48 ரன்களையும், திலக் வர்மா 39 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கத் தவறினர். இதனால் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஷுப்மன் கில், “முதல் போட்டிக்கு முன்பே இரண்டாவது போட்டிக்கான பிட்ச் கருப்பு மண் தரையில் நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றிபெற அதுவும் ஒரு காரணியாக அமைந்தது. ஏனெனில் இந்த விக்கெட் எங்களது பேட்டிங்கிற்கு சாரியானதாக இருந்தது. இந்த வகையான பிட்ச்சில் பந்து பழையதாகிவிட்டால், பேட்டர்கள் அதிரடியாக விளையாடுவது கடினம். அதன் காரணமாக பவர்பிளேவில் அதிரடியாக விளையாடினோம்.
Also Read: Funding To Save Test Cricket
நாம் அனைவரும் திட்டங்களைப் பற்றி பேசலாம், ஆனால் சில நேரங்களில் அது உங்கள் விருப்பப்படி செல்கிறது, சில நேரங்களில் அப்படி நடக்காது. இந்த போட்டியில் ரஷித் கானை இறுதியில் பயன்படுத்தற்காக வைத்திருந்தேன். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசியதன் காரணமாக அவருக்கு மேற்கொண்டு ஓவர்கள் தர முடியவில்லை. பிரசித் நன்றாக பந்து வீசினார், எனவே வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்த விரும்பினேன். அது எங்களுக்கு உதவியது” என்று தெரிவித்துள்ளார்.