ஃப்ரீ  ஹிட் சர்ச்சை - விளக்கம் கொடுத்த சைமன் டஃபில்!

Updated: Tue, Oct 25 2022 12:11 IST
Image Source: Google

ஐசிசி டி20 உலககோப்பையில் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான ஆட்டம் பல்வேறு சர்ச்சைக்கும், பரபரப்புக்கும் வித்தித்துள்ளது. இப்போட்டியில் 160 ரன்கள் என்ற இலக்கை துரத்த இந்திய அணி தடுமாறினாலும், விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இதில் உயரத்திற்காக நோ பால், 2 அகல பந்துகள் , பைசில் 3 ரன்கள் என இந்தியாவுக்கு சாதகமாக விசயங்கள் பல நடந்தது. இதில் ஏற்கனவே விராட் கோலி அடித்த சிக்ஸ் நோ பால் கிடையாது என்று பாகிஸ்தான் ரசிகர்கள் புலம்பி வரும் நிலையில், அதற்கான கிடைத்த ஃப்ரி ஹிட் பந்தும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது ஃபிரி ஹிட் பந்தை கோலி ஸ்விப் செய்ய முயன்ற போது, அந்த பந்து ஸ்டம்பை பதம் பார்த்து பின் நோக்கி சென்றது.

அது ஃப்ரி ஹிட் என்பதால் அவுட் இல்லை. இதனால், விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் 3 ரன்கள் ஓடினர். இதனை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் விரர்கள், பந்து ஸ்டம்பில் பட்ட பிறகு ஓட கூடாது. இதனை டேத் பாலாக அறிவிக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் இதனை ஏற்க மறுத்த நடுவர்கள், 3 ரன்களை பைசாக வழங்கினர். இதனால் பாகிஸ்தான் ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் கடுப்பாகினர்.

இதனிடையே இந்த சம்பவம் கருத்து கூறியுள்ள பிரபல முன்னாள் நடுவர் சைமன் டஃபில், நடுவர்கள் டேத் பாலாக அறிவிக்காமல், அதற்கு பைஸ் வழங்கியதில் எவ்வித தவறும் இல்லை என்று கூறியுள்ளார். ஃப்ரி ஹிட்டில் பேட்ஸ்மேன் போல்ட் ஆக முடியாது என்பதால், ஸ்டம்பில் பந்து பட்டலும் அது டேத் பால் என்று கருத முடியாது. அந்த பந்து கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு பைஸ் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

ரன் அவுட் செய்யும் போது பால் ஸ்டம்பில் பட்டு விலகி செல்லும் போது இதனை பயன்படுத்தி கொண்டு பேட்ஸ்மேன்கள் கூடுதலாக ரன்களை ஓடி எடுப்பார்கள். அது ரன் அவுட் என்று அறிவிக்கப்படாத பட்சத்தில் அந்த ரன்கள் பைஸ் என்று சேர்க்கப்படும். தற்போது ஃபிரி ஹிட்டிலும் அதே போல் நடைமுறை தான் தற்போதும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை