இங்கிலாந்து தொடரில் சிராஜின் இடம் உறுதி!

Updated: Sun, Jun 27 2021 14:29 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வி அடைந்ததை அடுத்து பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறது. 

அதிலும் குறிப்பாக இந்திய வீரர்களில் சில வீரர்களுக்கு ஓய்வு அளித்து விட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வருகின்றன.

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு சிறப்பாக இருந்து வந்தது. ஆனால் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற 3 வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ஷமியைத் தவிர மற்ற இருவரும் சோபிக்க தவறினர். அதிலும் குறிப்பாக பும்ராவின் பந்துவீச்சு படு மோசமாக இருந்ததால் அவர் மீது அதிக அளவு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியாக இளம் வீரர் முகமது சிராஜிற்கு  அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதன்படி விரலில் காயம் அடைந்த இசாந்த் சர்மா அல்லது பும்ராவிற்கு பதிலாக இங்கிலாந்து தொடரில் நிச்சயம் முகமது சிராஜ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடரின் போது அறிமுகமான சிராஜ் முன்னணி வீரர்கள் இல்லாதபோதும் வேகப்பந்து வீச்சு யூனிட்டை முன்னின்று வழி நடத்தி சிறப்பாக பந்து வீசி அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது பவுலிங்கில் நல்ல வேகம் மற்றும் ஸ்விங் ஆகியவை சிறப்பாக இருப்பதாலும் அவர் தற்போது நல்ல தன்னம்பிக்கையுடன் பந்து வீசி வருவதால் அவர் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை