IND vs SL, 2nd ODI: இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

Updated: Tue, Jul 20 2021 10:21 IST
Image Source: Google

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியுடன் 3போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அசத்தியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய அணி

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஷிகா் தவன் 86 ரன்களையும், இளம் வீரா் இஷான் கிஷன் 59 ரன்களையும் விளாசி வெற்றிக்கு வித்திட்டனா்.

இந்திய அணியில் பிரித்வி ஷா, இஷான் கிஷன், சூரியகுமாா் போன்ற இளம் வீரா்கள் அதிரடியாக ஆடியதால், கேப்டன் தவன் நிதானமாக ஆடி வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாா். குறுகிய ஓவா் ஆட்டங்களில் அதிரடி பேட்டிங் தேவை என்பதால், மூன்று வீரா்கள் செயல்பாடு குறிப்பிடும்படியாக அமைந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்து 37-ஆவது ஓவரிலேயே இந்தியா வீரா்கள் வெற்றி இலக்கை எட்டினா்.

அதனால் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் பெரிதாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது. மீண்டும் அணிக்கு திரும்பிய பிரித்வி ஷா தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தினாா். மணிஷ் பாண்டே மட்டுமே சரிவர ஆடாத நிலையில், அவா் மாற்றப்படலாம் எனக் கருதப்படுகிறது.

பந்துவீச்சில் சஹல், குல்தீப் யாதவ் ஆகியோா் இணைந்து சிறப்பாக பந்துவீசி மீண்டும் ஃபாா்முக்கு திரும்பியுள்ளனா். மூத்த வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்குமாா் இன்னும் தனது ஸ்விங் பவுலிங்கை வெளிப்படுத்தவில்லை. ஆல்ரவுண்டா் ஹாா்திக் பாண்டியாவும் தனது இருப்பை வெளிப்படுத்தி உள்ளாா். இந்திய அணியில் 3 புதுமுகங்கள் களமிறங்கினாலும் அவா்கள் தங்கள் சிறப்பான ஆட்டத்தால் கவனத்தை ஈா்த்துள்ளனா்.

இலங்கை அணி

அனுபவமற்ற வீரா்களைக் கொண்ட இலங்கை அணி தடுமாற்றத்துடன் காணப்படுகிறது. மூத்த வீரா்கள் இல்லாத நிலையில் கேப்டன் தசுன் ஷானகா தலைமையில் சொந்த மண்ணில் ஆடினாலும் தோல்வியடைந்துள்ளது. சமீகா கருணரத்னே கடைசி ஓவா்களில் அதிரடியாக ஆடியதால் இலங்கை அணி 260 என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது.

நாங்கள் 300 ரன்களுக்கு மேல் பெறுவோம் என எதிா்பாா்த்தோம். ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் குறைவான ஸ்கோரையே பெற்றோம் என கருணரத்னே.

தரமான இந்திய பேட்டிங்கை சமாளிக்க இலங்கை பந்துவீச்சாளா்கள் கடும் முயற்சி செய்ய வேண்டிய நிலையில் உள்ளனா். ஒருவேளை இலங்கை அணி இன்றைய போட்டியில் தோற்கும் பட்சத்தில் தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உத்தேச அணி

இலங்கை - அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுகா, பானுகா ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷானகா (கே), வாணிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, இசுரு உதனா, துஷ்மந்தா சாமீரா, லக்ஷன் சண்டகன்.

இந்தியா - ஷிகர் தவான் (கே), பிருத்வி ஷா, இஷான் கிஷன், மனீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை