SL vs AUS, 3rd ODI: இலங்கைக்கு 292 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸி!

Updated: Sun, Jun 19 2022 18:19 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், 2ஆவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றதையடுத்து தொடர் 1-1 என சமனடைந்தது.

3ஆவது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்மித் காயத்தால் ஆடவில்லை. அவருக்கு பதிலாக மிட்செல் மார்ஷ் ஆடுகிறார். குனெமேன் மற்றும் ஜெய் ரிச்சர்ட்ஸன் ஆகியோரும் இந்த போட்டியில் ஆடுகின்றனர்.

அதேபோல் இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குணதிலகாவிற்கு பதிலாக டிக்வெல்லா சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 9 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 10 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் லபுசாக்னேவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன அரோன் ஃபிஞ்ச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஃபிஞ்ச் அரைசதம் அடித்தார். ஆனால் மறுமுனையில் லபுசாக்னே 29 ரன்களில் ஆட்டமிழக்க, 62 ரன்கள் எடுத்திருந்த ஆரோன் ஃபிஞ்சும் விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி - ட்ராவிஸ் ஹெட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேரி 49 ரன்களில் ஆட்டமிழந்து நூழிலையில் அரைசதத்தை தவறவிட்டார்.

அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 33 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். ஆனாலும் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ட்ராவிஸ் ஹெட் அரைசதம் கடந்ததுடன், 70 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் ஜெஃப்ரி வண்டர்சே 3 விக்கெட்டுகளைக் கைப்பறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை