SL vs BAN, 1st T20I: குசால் மெண்டிஸ் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!

Updated: Thu, Jul 10 2025 22:36 IST
Image Source: Google

SL vs BAN, 1st T20I: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் குசால் மெண்டிஸின் அதிரடியான அரைசதத்தின் காரணமாக இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

இலங்கை- வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று பல்லகலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.  இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு பர்வேஸ் ஹொசைன் எமான் மற்றும் தன்ஸித் ஹசன் தமிம் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 46 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 16 ரன்களில் தன்ஸித் ஹசன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார்.

அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான பர்வேஸ் ஹொசைன் எமான் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய தாவ்ஹித்  ஹிரிடோயும் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது நைம் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் மெஹிதி ஹசன் மிராஸ் 29 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது நைம் 32 ரன்களையும், ஷமிம் ஹொசைன் 14 ரன்களையும் சேர்த்தனர்.

இதன்மூலம் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்களைச் சேர்த்துள்ளது. இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளவளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பதும் நிஷங்கா 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 42 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: LIVE Cricket Score

அடுத்து களமிறங்கிய குசால் பெரேராவும் தனது பங்கிற்கு 25 ரன்களில் பெவிலியன் திரும்ப, மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய வந்த குசால் மெண்டிஸ் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். பின் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 73 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தாலும் இலங்கை அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவிய இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை