ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி, வங்கதேச அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - திமுத் கருணரத்னே இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த இணை சீரான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், கருணாரத்னே 18 ரன்களிலும், பதும் நிசங்கா 40 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனையடுத்து, குஷால் மெண்டிஸ் மற்றும் சதீரா சமரவிக்கிரம ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி இலங்கை அணியின் ஸ்கோரினை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். குஷால் மெண்டிஸ் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

Advertisement

அதன்பின் களமிறங்கியவர்களில், அசலங்கா 10, தனஞ்ஜெயா டி சில்வா 6, தாசுன் ஷானகா 24 ஆட்டமிழந்து வெளியேறினர். களமிறங்கியது முதலே சிறப்பாக விளையாடிய சதீரா சமரவிக்கிரம 72 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில்,  இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் குவித்தது. வங்கதேசதம் தரப்பில் ஹாசன் மஹ்முத் மற்றும் டஸ்கின் அகமது தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷோரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் அணிக்கு முகமது நைம் - மெஹிதி ஹசன் மிராஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 28 ரன்களை எடுத்திருந்த மெஹிதி ஹசன் ஆட்டமிழக்க, 21 ரன்களில் முகமது நைமும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் லிட்டன் தாஸ் 15, ஷாகிப் அல் ஹசன் 3, முஷ்பிக்கூர் ரஹீம் 29 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.  

அதன்பின் களமிறங்கிய தாகித் ஹிரிடோய் ஒருமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கத்தில் இருந்த ஷமிம் ஹொசைன் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடி 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 82 ரன்களைச் சேர்த்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட தாஹித் ஹிரிடோயும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி வீரர்களால் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் மஹீஷ் தீக்‌ஷனா, மதீஷா பதிரானா, தசுன் ஷனகா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News