SL vs IND, 1st ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கப்போவது யார்?

Updated: Fri, Aug 02 2024 12:27 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றதுடன், இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது இன்று முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

இந்திய அணி

ரோஜித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் அறிமுக வீரர்களான ரியான் பராக், ஷிவம் தூபே மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோருக்கும் ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேற்கொண்டு ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

அவர்களைத்தவிர்த்து குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேலா, அர்ஷ்தீப் சிங், கலீல் அஹ்மத் ஆகியோரும் இந்திய ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்பட்கிறது. இதில் இந்திய அணி ஏற்கெனவே டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ள நிலையில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

இலங்கை அணி

மறுபக்கம் புதிய கேப்டனான சரித் அசலங்கா தலைமையில் இலங்கை அணி இப்போட்டியை எதிர்கொள்கிறது. முன்னதாக அசலங்கா தலைமையிலான இலங்கை அணி டி20 தொடரை முழுவதுமாக இழந்த நிலையில், தற்போது அதற்கான பதிலடியை ஒருநாள் தொடரில் கொடுக்கும் முனைப்புடன் செயல்படவுள்ளது. இருப்பினும் அணியின் நட்சத்திர வீரர்கள் மதீஷா பதிரானா, தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகி இருப்பது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

இருப்பினும் அணியின் பேட்டிங்கில் பதும் நிஷங்கா, குஷால் மெண்டிஸ், அவிஷ்கா ஃபெர்னாண்டோ, சதிரா சமரவிக்ரம ஆகியோரும் பந்துவீச்சில் மஹீஷ் தீக்‌ஷனா, வநிந்து ஹசரங்கா, அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோருடன் அறிமுக வீரர்கள் இஷான் மலிங்கா, முகமது ஷிராஸ் ஆகியோரும் இருப்பது அணிக்கு நம்பிக்கையளிக்கும் விசயமாக பார்க்கப்படுகிறது. இதனால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஷங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமர்விக்ரம, சரித் அசலங்கா (கேப்டன்), ஜனித் லியனகே, துனித் வெலலாகே, வனிந்து ஹஷரங்கா, மகேஷ் தீக்சன, அசிதா ஃபெர்னாண்டோ, இஷான் மலிங்கா.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

Sri Lanka vs India 1st ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - கேஎல்ராகுல், குசல் மெண்டிஸ்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், பதும் நிஷங்கா
  • ஆல்-ரவுண்டர்கள் - அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வனிந்து ஹசரங்க (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் – குல்தீப் யாதவ், மகேஷ் தீக்ஷனா.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை