SL vs PAK, 1st Test: சண்டிமால், மெண்டீஸ் அபாரம்; வலிமையான நிலையில் இலங்கை!

Updated: Mon, Jul 18 2022 17:45 IST
Image Source: Twitter

பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இலங்கை அணியில் தினேஷ் சண்டிமால் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். தினேஷ் சண்டிமால் 76 ரன்கள் அடித்தார். தொடக்க வீரர் ஒஷாடா ஃபெர்னாண்டோ 35 ரன்களும், பின்வரிசையில் மஹீஷ் தீக்‌ஷனா 38 ரன்களும் அடித்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 222 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அஃப்ரிடி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், ஹசன் அலி மற்றும் யாசிர் ஷா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் மற்ற அனைத்து வீரர்களும் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய பாபர் அசாம் சதமடித்தார். பாகிஸ்தான் அணியை சதமடித்து தனி ஒருவனாக கரைசேர்த்தார் பாபர் அசாம். 148 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான் அணி. 

மறுமுனையில் நசீம் ஷாவை நிறுத்திக்கொண்டு அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த பாபர் அசாம், கடைசி விக்கெட்டுக்கு 70 ரன்களை சேர்க்கச்செய்தார்.அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த பாபர் அசாம் 119 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 218 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி. இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்பின் 4 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களைச் சேர்த்தது. பின் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணிக்கு ஒஷாதா ஃபெர்னாண்டோ 17 ரன்களுடனும், கசும் ரஜிதா 3 ரன்களுடனும் தொடங்கினர்.

இதில் ரஜிதா 7 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த ஃபெர்னாண்டோ - குசால் மெண்டீஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 64 ரன்களில் ஃபெர்னாண்டோவும், 76 ரன்களில் மெண்டீஸும், 9 ரன்களில் மேத்யூஸும் விக்கெட்டை இழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் சண்டிமல் அரைசதம் கடந்து அணியை வலிமையான நிலைக்கு அழைத்துச் சென்றார். இதனாம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களைச் சேர்த்துள்ளது.

பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 5 விக்கெட்டுகளையும், யாசிர் ஷா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இலங்கை தரப்பில் தினேஷ் சண்டிமல் 86 ரன்களுடன் களத்தில் உள்ளர். இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 333 ரன்களைச் சேர்த்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை