SL vs PAK, 1st Test: ஷாஹீன் அஃப்ரிடி அபாரம்; 222 ரன்களில் இலங்கை ஆல் அவுட்!

Updated: Sat, Jul 16 2022 16:26 IST
Image Source: Google

கல்லே நகரில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டிஇன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணாரத்னே பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

வலுவான வேகப்பந்துவீச்சைக் கொண்டிருக்கு பாகிஸ்தான் அணி தொடக்கத்திலிருந்தே இலங்கை அணிக்கு நெருக்கடி அளித்தது. ஷாகீன் ஷா அப்பிரிடி, ஹசன் அலிஇருவரும் தங்களின் துல்லியமான பந்துவீச்சால் மிரட்டினர். இதனால் இலங்கை அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இலங்கை கேப்டன் திமுத் கருணா ரத்னே ஒரு ரன்னில் அஃப்ரிடி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அதன்பின் மென்டிஸ், ஃபெர்னான்டோ இருவரும் ஓரளவுக்கு நிதானமாக பேட்செய்தனர். இருவரும் 49 ரன்கள் சேர்த்தநிலையில், பிரித்தனர். மென்டிஸ் 21 ரன்னில் யாசிர் ஷா பந்துவீச்சில் வெளியேறினார்.

அதன்பின் அடுத்த 8 ரன்கள் சேர்ப்பதற்குள் அடுத்தடுத்து இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பெர்னான்டோ (35), மேத்யூஸ் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர்.

5ஆவது விக்கெட்டுக்கு தனஞ்செயா, சந்திமால் ஜோடி ஓரளவுக்குத் தாக்குப்பிடித்து ஆடினர். தனஞ்செயா 11 ரன்னில் அப்ரிடி பந்துவீச்சில் க்ளீ்ன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்துவந்த டிக்வெலா(4),ரமேஷ் மெண்டிஸ்(11),ஜெயசூர்ய(3) என வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் அடித்த சந்திமால், இந்தப் போட்டியிலும் தனிநபராக நிலைத்து விளையாடி அரைசதம் அடித்தார். நிதானமாக ஆடிய சந்திமால், 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 

இதனால் இலங்கை அணி 66 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை