SL vs PAK, 2nd Test: டி சில்வா அபார சதம்; பாகிஸ்தானுக்கு 508 ரன்கள் டார்கெட்!

Updated: Wed, Jul 27 2022 13:46 IST
SL vs PAK, 2nd Test: Sri Lanka declare their 2nd innings at 360/ 8; Pakistan need a record chase of (Image Source: Google)

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நசிம் ஷா, யாசிர் ஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி ரமேஷ் மெண்டிஸ் மற்றும் ஜெயசூர்யாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இந்நிலையில் 2ஆவது இன்னிங்சை இலங்கை அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களா டிக்வெலா - பெர்ணாண்டோ களமிறங்கினர். 15 ரன்னிலும் ஃபெர்ணான்டோ 19 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து வந்த குசல் மெண்டிஸ் 15, மேத்யூஸ் 35, தினேஷ் சண்டிமால் 21 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

போதுமான வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டதை தொடர்ந்த இலங்கை அண்யில் தஞ்செய டி சில்வா அபாரமான ஆட்டத்தை வெளிப்படித்தி சதமடித்து அசத்தினார். தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி சில்வா 109 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் 360 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை அணி டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக டி சில்வா 109 ரன்களை விளாசினார். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா, நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதன்மூலம் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு 508 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது. அதன்படி இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை