இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக குசால் பெரேரா 39 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் - ரீசா ஹெண்ட்ரிக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தனர்.
இதன் மூலம் 14.4 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்க அணி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றி அசத்தியது. மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.