ஐபிஎல்-லிருந்து வெளியேறி மாலத்தீவிற்கு சென்ற மைக்கேல் ஸ்லாட்டர்; தக்க பதிலடி வழங்கிய ஆஸி பிரதமர்!

Updated: Mon, May 03 2021 20:30 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வீரர்கள். ஊழியர்களுக்கு அடுத்தடுத்து கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் வீரர்கள், நடுவர்கள், வர்ணனையாளர்கள் என பலரும் தொடரை விட்டு விலகி சொந்த நாட்டை நோக்கி படை எடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக இருந்து வந்தார். தொடர்ந்து அதிகரித்து வந்த கரோனா அச்சுறுத்தலால் அவர் திடீரென பபுளில் இருந்து வெளியேறினார். ஆனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை. மாறாக மாலத்தீவுக்கு சென்றுள்ளார். இதற்கு காரணம் ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்காததே ஆகும்.

இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால், இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் மே 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து அறிவித்த அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலியராக இருந்தாலும் 15ஆம் தேதி வரை நாட்டுக்குள் வரக்கூடாது. கிரிக்கெட் வீரர்களுக்கும் இது பொருந்தும் என அறிவித்தார். மேலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் வீரர்களுக்கு தனி விமானமும் ஏற்பாடு செய்ய முடியாது என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அனுமதி கிடைக்காதது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மைக்கேல் ஸ்லாட்டர், “ஆஸ்திரேலிய அரசு உண்மையில் தனது குடிமக்களின் பாதுகாப்பை விரும்பினால், ஆஸ்திரேலியர்களை வீட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். ஆனால் இது அவமானமாக உள்ளது. பிரதமர் ஸ்காட் எந்த தைரியத்தில் இப்படி செய்கிறார். நான் ஆஸ்திரேலிய அரசின் அனுமதியுடன் தான் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வந்தேன். ஆனால் தற்போது என்னை அந்த அரசே ஏற்க மறுக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இவரை போன்றே ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட பல ஆஸ்திரேலிய வீரர்கள் ஆதங்கத்தில் உள்ளனர். விமான போக்குவரத்து விஷயத்தில் ஆஸ்திரேலிய அரசு கைவிட்டு விட்டதால் அவர்கள் வேறு வழியின்றி அணிகளின் பயோ பபுளில் இருந்து வருகின்றனர். வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக வெளியேறும் எண்ணத்தில் தான் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.,

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை