முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் vs தென் ஆப்பிரிக்கா மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

Updated: Wed, Apr 30 2025 20:54 IST
Image Source: Google

Sri Lanka Women vs South Africa Women Dream11 Prediction, 3rd ODI Tri Series: இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. மேலும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன் இத்தொடர் நடைபெற இருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன.

இத்தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியை எதிர்த்து லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் இந்திய அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணியிலும் அதிரடி பேட்டர்களும், அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுடன் இளம் வீராங்கனைகளும் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

SL-W vs SA-W ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்
  • இடம் - ஆர். பிரமதாசா கிரிக்கெட் மைதானம், கொழும்பு
  • நேரம்- மே 02, காலை 10 மணி (இந்திய நேரப்படி)

SL-W vs SA-W ODI, Pitch Report

இந்த போட்டி கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறும். இங்கு இதுவரை 170 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், 92 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 66 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 231 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 375 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

SL-W vs SA-W: Where to Watch?

இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் முத்தரப்பு தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் FanCode செயலியில் பார்க்கலாம்.

SL-W vs SA-W Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 23
  • இலங்கை - 05
  • தென் ஆப்பிரிக்கா - 15 
  • முடிவில்லை - 03

SL-W vs SA-W ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - அனுஷ்கா சஞ்சீவானி
  • பேட்ஸ்மேன்கள் - ஹாசினி பெரேரா, லாரா வோல்வார்ட் (துணை கேப்டன்), சுனே லூஸ், டஸ்மின் பிரிட்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - சாமரி அத்தபத்து (கேப்டன்), கவிஷா தில்ஹாரி, அன்னேரி டெர்க்சன்
  • பந்துவீச்சாளர்கள் – இனோகா ரணவீர, நோன்குலுலெகோ மலாபா, அயபோங்கா காக்கா.

Sri Lanka Women vs South Africa Women Probable Playing XI

Sri Lanka Women Probable Playing XI: ஹாசினி பெரேரா, சமாரி அத்தபத்து (கேப்டன்), ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹன்சிமா கருணாரத்ன, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, அச்சினி குலசூரிய, மல்கி மதரா, சுகந்திகா குமாரி/இனோஷி பிரியதர்ஷனி, இனோகா ரணவீர.

South Africa Women Probable Playing XI: லாரா வோல்வார்ட் (கேப்டன்), டஸ்மின் பிரிட்ஸ், லாரா குட்ஆல், சுனே லூஸ், கராபோ மெசோ, சோலே ட்ரையோன், அன்னேரி டெர்க்சன், நதின் டி க்ளெர்க், மசபட்டா கிளாஸ், நோன்குலுலெகோ மலாபா, அயபோங்கா காக்கா.

SL-W vs SA-W Dream11 Prediction, SL-W vs SA-W ODI Dream11 Team, Fantasy Cricket Tips, 3rd ODI Tri Series, ODI Tri Series, SL-W vs SA-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, Sri Lanka Women vs South Africa Women

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை