இந்தியாவுக்கு 100ஆவது போட்டியில் விளையாடுவது தனி உணர்வு - ஸ்மிருதி மந்தனா!

Updated: Mon, Oct 10 2022 19:55 IST
Smriti Mandhana lauds team's performance against Thailand, says special to be playing 100th T20I (Image Source: Google)

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தாய்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தாய்லாந்து அணி 37 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்திய தரப்பில் சினே ராணா 3 விக்கெட்டுகளையும் தீப்தி சர்மா ராஜேஸ்வரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அதன்பின் 38 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- மேக்னா களமிறங்கினர். ஷபாலி வர்மா 8 ரன்னில் அவுட் ஆனார். அதனையடுத்து வேகப்பந்து வீச்சாளர் பூஜா களமிறங்கினார்.

மேக்னா- பூஜா ஜோடி சிறப்பாக விளையாடி 6 ஓவரில் அணியை வெற்றி பெற வைத்தனர். மேக்னா 20 ரன்னிலும் பூஜா 12 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின் பேசிய இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, “இந்தியாவுக்காக விளையாடுவதும், 100ஆவது டி20 போட்டியில் விளையாடுவதும் ஒரு தனி உணர்வு. இந்திய மகளிர் அணியின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த போட்டியில் தாய்லாந்து சிறப்பாக விளையாடியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடுவோம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மூன்று பேட்டர்களும் தங்கள் வேலையைச் செய்தனர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு எங்களுக்கு அரையிறுதி போட்டி உள்ளது. நாங்கள் கடினமாக உழைக்கிறோம், அதிரடியான் ஆட்டத்தை விளையாடுவோம் என்று எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை