SA vs IND, 1st ODI: தோல்விக்கான காரணங்கள் குறித்து விளக்கமளித்த கேஎல் ராகுல்!

Updated: Thu, Jan 20 2022 11:08 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று பார்ல் நகரிலுள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 296 ரன்களை குவித்தது. இதனைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 265 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய கே.எல்.ராகுல், “நாங்கள் தொடக்கத்தில் சிறப்பாக தான் பவுலிங் செய்தோம். மிடில் ஆர்டரில் தான் பெரும் சொதப்பல் நடந்துவிட்டது. மிடில் ஓவர்களில் விக்கெட் எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்வோம். பேட்டிங்கிலும் மிடில் ஆர்டர் தான் எங்களுக்கு பிரச்சினையே இருந்தது.

முதல் 20 - 25 ஓவர்களுக்கு இந்திய அணி நல்ல நிலைமையில் இருந்தது. நாங்கள் இலக்கை சுலபமாக விரட்டிவிடுவோம் என நினைத்தேன். ஆனால் மிடில் ஆர்டரில் முக்கிய விக்கெட்கள் சரிந்தன. 

தென் ஆப்பிரிக்க பவுலர்கள் சிறப்பான கம்பேக் கொடுத்தனர். சிறப்பான ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்ய வேண்டும் என்று தான் நினைத்தோம். அடுத்து வரும் போட்டிகளில் தவறுகளை சரிசெய்வோம்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை