ஐபிஎல் 2022: சஹாலை தொடர்ந்து பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த உத்தப்பா!

Updated: Fri, Apr 08 2022 19:21 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட்டின் 15ஆவது சீசன் போட்டிகள் கடந்த 2 வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். அதன்படி வழக்கமாக கிளம்பும் சர்ச்சைகளை போலவே இந்தாண்டும் புது புது சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

யுவேந்திர சாஹல் சமீபத்தில் ஒரு பரபரப்பை கிளப்பியிருந்தார். அதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது, ஒரு சீனியர் வீரர் தன்னை 15ஆவது மாடியில் இருந்து தள்ளிவிட முயன்றதாகவும், நூலிழையில் தப்பியதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் மும்பை அணி மீது ரசிகர்களின் கவனம் திரும்பியது.

இந்நிலையில் சென்னை அணியில் முன்னணி வீரரான ராபின் உத்தப்பாவும் மும்பை அணி மீது குற்றம்சாட்டியுள்ளார். உத்தப்பா ஐபிஎல் தொடரில் இதுவரை 6 அணிகளுக்காக விளையாடியுள்ளார். அதில் முதன் முதலில் மும்பை அணிக்காக தான் கடந்த 2008ஆம் ஆண்டு ஆடினார். அப்போது தன்னை கட்டாயப்படுத்தி பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் தொடரில் முதன்முதலில் ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு விருப்பத்தின் பேரில் மாற்றப்பட்ட வீரர் நானாக தான் இருப்பேன். அந்த அணியில் இருந்து என்னை ஆர்சிபிக்கு மாறிக்கொள்ளுமாறு கேட்டனர். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் மும்பை அணியை சேர்ந்த ஒருவர் ( பெயர் சொல்ல விரும்பவில்லை ) நான் கையெழுத்திடவில்லை என்றால் மும்பை அணி ப்ளேயிங் 11இல் வாய்ப்பே தரமாட்டோம் என மிரட்டினார்.

அதன்பின்னர் மும்பை மீது எனக்கு இருந்த விஸ்வாசம் சுக்குநூறானது. இதனால் 2009இல் ஆர்சிபிக்காக என்னால் ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாட முடியவில்லை. மன அழுத்தத்திலேயே இருந்தேன். அதன் பின்னர் எனக்கான வாய்ப்புகள் பறிபோய்விடும் என்பதை புரிந்துக்கொண்டு மீண்டும் கம்பேக் கொடுத்தேன்” எனக்கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை