இதற்காகதான் அக்ஸர் படேலை இந்திய அணியில் சேர்த்துள்ளனர் - சவுரவ் கங்குலி!

Updated: Fri, Aug 25 2023 21:38 IST
Image Source: Google

ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி பாகிஸ்தான் நேபாள் அணிகளுக்கு இடையே பாகிஸ்தானில் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இந்திய அணி தனது முதல் சுற்றில் இரண்டு போட்டிகளை செப்டம்பர் இரண்டு மற்றும் நான்காம் தேதிகளில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு எதிராக விளையாடுகிறது.

இதற்கு முன்னதாக இந்திய அணி பெங்களூரில் உள்ள ஆலூர் மைதானத்தில் தங்கி கண்டிஷனிங் பயிற்சியில் ஆறு நாட்கள் இருப்பதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. தற்பொழுது ஆசியக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியினர் அனைவரும் அங்கே முகாமிட்டு இருக்கிறார்கள். இந்த கண்டிஷனிங் பயிற்சி முகாமுக்கு முன்பாக இந்திய அணி வீரர்களுக்கு உடல் தகுதியை சோதிக்கும் விதமாக யோ யோ என்ற உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்ததது குறித்து முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “யுஸ்வேந்திர சஹாலை விட இந்தியா அக்‌ஷர் படேலைத் தேர்ந்தெடுத்தது அவரது பேட்டிங்கால்தான். யாராவது காயம் அடைந்தால் சஹால் இன்னும் திரும்பி வர முடியும். தற்போது 17 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இதிலிருந்து இருவர் நீக்கப்பட்டு, உலகக் கோப்பைக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. வரும் 2ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. தற்போது ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் 2ஆவது இடத்திலும், இந்தியா 3ஆவது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, ஹரீஷ் ராஃப் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை