ஒருநாள் உலகக் கோப்பையை குறிவைத்து நாங்கள் தயாராகி வருகிறோம் - காகிசோ ரபாடா!

Updated: Mon, Jun 19 2023 12:06 IST
South Africa have the IPL advantage going into ODI WC: Rabada (Image Source: Google)

ஒருநாள் உலகக்கோப்பை இந்த வருடம் இந்தியாவில் நடைபெறுகிறது. வருகிற அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும் இந்த உலகக்கோப்பைக்கான குவாலிபயர் போட்டி தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தரவரிசை பட்டியல் அடிப்படையில் எட்டு அணிகள் உறுதியாகிவிட்டன. 

மீதம் இருக்கும் இரண்டு இடங்களுக்கு 10 அணிகளுக்கு மத்தியில் தகுதிச்சுற்று போட்டி நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படுகிறது. மொத்தம் பத்து அணிகள் இந்த வருடம் உலகக்கோப்பையில் பங்கேற்கின்றன. உலககோப்பைக்காக மைதானங்களின் பிட்ச்கள் தீவிரமாக தயார் செய்யும் வேலையை இப்போதே பிசிசிஐ செய்து வருகிறது. 

மொத்தம் 11 மைதானங்கள் தயாராகிறது. குழப்பத்தை ஏற்படுத்தி வந்த பாகிஸ்தான் அணியும் கடைசியில் நாங்கள் இந்தியாவிற்கு வந்து உலகக்கோப்பையில் பங்கேற்கிறோம் என்று ஒப்புக்கொண்டது. இந்த உலக கோப்பைக்கு இன்னும் ஆறு மாதத்திற்கும் குறைவான காலங்களே இருக்கும் நிலையில், இந்திய அணி தீவிரமாக பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு இந்த கோப்பையை வெல்வதற்கு முனைப்பு காட்டி வருகிறது. 

கடைசியாக 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றது. அதன் பிறகு ஐசிசி நடத்தும் எந்தவித கோப்பையையும் வெல்ல முடியாமல் இருக்கிறது. அதற்காக இந்திய அணி மோசமாக செயல்பட்டார்கள் என்றில்லை. நான்கு முறை இறுதிப்போட்டி மற்றும் நான்கு முறை அரையிறுதி என அனைத்திலும் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கின்றனர். 

இந்தியாவில் நடைபெறுவதால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெறும் என்று பல்வேறு கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே இந்திய அணி அதற்கான திட்டங்களை வகுத்து ஒவ்வொரு ஒருநாள் தொடரையும், 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் பயிற்சி போல அணுகி தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா சமீபத்தில் அளித்த பேட்டியில், “இந்த வருடம் ஒருநாள் உலகக் கோப்பையை நாங்கள் குறிவைத்து தயார் செய்து வருகிறோம். அணியின் வீரர்களின் தேர்வும் அதற்கு ஏற்றவாறு கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது. ஐபிஎல் போட்டிகளில் பல முன்னணி தென் ஆப்பிரிக்க வீரர்கள் விளையாடியுள்ளனர். 

இந்தியாவில் இருக்கும் மைதானங்களின் கண்டிஷன்களை நன்கு உணர்ந்தவர்களாக இருக்கின்றோம். இந்த அட்வான்டேஜ் வைத்துக் கொண்டு பல வருடங்களாக நாங்கள் தவறவிட்டிருக்கும் 50-ஓவர் உலகக் கோப்பையை வெல்வோம். உலகக்கோப்பையுடன் நாடு திரும்புகையில், மீண்டும் தென் ஆப்பிரிக்கா அணி மீது உலகத்தின் கவனம் திரும்பச்செய்வோம். இந்த உலககோப்பையில் எங்களுக்கு சற்று கடினமான அணியாக இருப்பவர்கள் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகியோர் தான்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை