மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!

Updated: Tue, Sep 03 2024 20:50 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிவிரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து  மற்றும் பாகிஸ்தானின் மகளிர் அணிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. 

தற்மயம் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த அணியின் கேப்டனாக லாரா வோல்வார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணியை முதல் முறையாக லாரா வோல்வார்ட் வழிநடத்தவுள்ளவுள்ளார். மேற்கொண்டு இதே அணி பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலும் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அணியில் சுனே லூஸ், மரிஸான் கேப், நதின் டி கிளார்க், தஸ்மின் பிரிட்ஸ் மற்றும் அயபொங்கா காகா உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர். மேலும் எலிஸ்-மேரி மார்க்ஸ், துமி செகுகுனே, மியாகே டி ரிடர் மற்றும் அறிமுக வீராங்கனை செசியோன் நாயுடு ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர்த்து மியானே ஸ்மிட் இந்த அணியின் ரிஸர்வ் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

தென் ஆப்பிரிக்க மகளிர் அணி: லாரா வோல்வார்ட் (கே), அன்னேக் போஷ், தஸ்மின் பிரிட்ஸ், நதின் டி கிளார்க், அன்னேரி டெர்க்சன், மைக் டி ரிடர், அயன்டா ஹ்லுபி, சினாலோ ஜாஃப்டா, மரிஸான் கேப், அயபோங்கா காக்கா, சுனே லூஸ், நோன்குலுலேகோ ம்லாபா, செசியோன் நாயுடு, துமி செகுகுனே, சோலே டிரையன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை