விண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!

Updated: Mon, Jul 08 2024 14:39 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க அணி இம்மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது வரும் ஆகஸ்ட் மாதம் 07ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை டிரினிடாட்டில் நடைபெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை கயானாவில் நடைபெறவுள்ளது. இநிலையில் இத்தொடரில் பங்கேற்கும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்செனிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அறிமுக வீரரான மேத்யூ ப்ரீட்ஸ்கி மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஆகியோரும் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் இடம்கிடைத்துள்ளது. மேற்கொண்டு ஐடன் மார்க்ரம், கேசவ் மஹாராஜ், நந்த்ரே பர்கர், காகிசோ ரபாடா, டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லுங்கி இங்கிடி, வியான் முல்டர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கி, நந்த்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஸோர்ஸி, கேசவ் மஹராஜ், ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை