SA vs IND: டெஸ்ட் தொடரிலிருந்து அன்ரிச் நோர்ட்ஜே  விலகல்!

Updated: Tue, Dec 21 2021 17:11 IST
Image Source: Google

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

அதன்படி தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும், ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குகின்றன. ஒமைக்ரான் தொற்று பாதிப்பால் டி20 தொடா் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டார்கள். பிறகு மும்பையிலிருந்து தனி விமானம் மூலமாகத் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றது இந்திய அணி. தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜே இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 28 வயது நோர்ட்ஜே, 12 டெஸ்டுகள், 12 ஒருநாள், 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

தென் ஆப்பிரிக்க அணி: டீன் எல்கர் (கேப்டன்), டெம்பா பாவுமா, குயின்டன் டி காக், ககிசோ ரபாடா, சரேல் எர்வீ, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, கேசவ் மஹராஜ், லுங்கி இங்கிடி, ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், கீகன் பீட்டர்சன், ரஸ்ஸி வெண்டர் டுசென், கைல் வெர்ரேய்ன், மார்கோ ஜான்சன், க்ளென்டன் ஸ்டூர்மேன், ப்ரீனெலன் சுப்ரயன், சிசண்டா மாகலா, ரியான் ரிக்கல்டன், டுவான் ஆலிவியர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை